Silambarasan biography wikipedia

சிலம்பரசன்

சிலம்பரசன் (Silambarasan) (பிறப்பு 3 பிப்ரவரி 1983), சிம்பு அல்லது தனது பெயரின் முதலெழுத்தான எஸ்.டி.ஆர். மற்றும் லிட்டில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் இவர் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான டி. ராஜேந்தரின் மகனாவார்.[1] இவர் தனது தந்தை இயக்கிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.[2] 2002இல் முதல் முறையாக விஜய டி.

ராஜேந்தர் இயக்கிய காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானார்.[3][4][2] 2006ஆம் ஆண்டு தமிழக அரசு இவருக்குக் கலைமாமணி விருதைக் கொடுத்துக் கௌரவித்துள்ளது.[5]

முதன்மையாக தனது வெளிப்படையான தன்மை காரணமாக சிலம்பரசன் பல சர்ச்சைகளுக்கு உட்பட்டுள்ளார்.[6][7]

சொந்த வாழ்க்கை

சிலம்பரசன் 1983 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள சென்னையில் டி.

ராஜேந்தர் மற்றும் உஷா ராஜேந்தர் ஆகியோருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். இவருக்கு குறளரசன் என்ற தம்பியும் இலக்கியா என்ற சகோதரியும் உள்ளனர். சிறு வயதிலிருந்தே, இவர் சிவன் மீது தீவிர பக்தி கொண்டவராக உள்ளார்.[8]

சிலம்பரசன் சென்னை, டான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர் சென்னை, இலயோலா கல்லூரியில் படித்தார்.[9]

விருதுகள்

பெருமை
விருதுகள்
பரிந்துரைகள்

நடித்த திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்புகள்
1984 உறவை காத்த கிளி சிம்பு
1986 மைதிலி என்னை காதலி
1987 ஒரு தாயின் சபதம்
1988 என் தங்கை கல்யாணி
1989 சம்சார சங்கீதம்
1991 சாந்தி என்னது சாந்தி பாபு
1992 எங்க வீட்டு வேலன் வேலன்
1993 பெற்றெடுத்த பிள்ளை குமரன்
சபாஷ் பாபு பாபு
1994 ஒரு வசந்த கீதம் சிலம்பு
1995 தாய் தங்கை பாசம் வேலு
2002 காதல் அழிவதில்லைசிம்பு
2003 தம் சத்யா
அலைஆதி
கோவில்சக்திவேல்
2004 குத்துகுருமூர்த்தி
மன்மதன்மதன்குமார் (மன்மதன்), மதன்ராஜ் இத்திரைபடத்தின் திரைகதையை இவரே எழுதினார்
2005 தொட்டி ஜெயாஜெயச்சந்திரன் (தொட்டி ஜெயா)
2006 சரவணாசரவணா
வல்லவன்வல்லவன் (பல்லன்)
2008 காளைஜீவா
சிலம்பாட்டம்தமிழரசன், விச்சு
2010 விண்ணைத்தாண்டி வருவாயாகார்த்திக் தெலுங்கு பதிப்பில் கெளரவ வேடம்
கோவாமனமதன்
2011 வானம்தில்லை ராஜா (கேபிள் ராஜா)
ஒஸ்திஒஸ்தி வேலன் (வேல்முருகன்)
2012 போடா போடிஅர்ஜுன்
2013 கண்ணா லட்டு தின்ன ஆசையா
2014 இங்க என்ன சொல்லுது
2015 டொங்காட்டா
காக்கா முட்டை பிராட் மகாராஜா சீமான்
வாலுசக்தி (சார்ப்)
2016 இது நம்ம ஆளு சிவா
அச்சம் என்பது மடமையடாரஜினிகாந்த் முரளிதரன்
2017 அன்பானவன் அசராதவன் அடங்காதவன்மதுர மைக்கேல், அஸ்வின் தாத்தா, திக்கு சிவா
2018 செக்கச்சிவந்த வானம்எதிராஜ் சேனாபதி
காற்றின் மொழி
2019 வந்தா ராஜாவாதான் வருவேன்ஆதித்யா (ராஜா)
90 ML
2021 ஈஸ்வரன்ஈஸ்வரன்
மகா மாலிக்
மாநாடுஅப்துல் காலிக்
2022 வெந்து தணிந்தது காடுமுத்து (முத்துவீரன்)
2023 பத்து தலை ஏ.ஜி.ஆர் (ஏ.ஜி.

ராவணன்)

2024 STR-48

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்